அதிரையை சேர்ந்தவர் ASM அப்துல் ஹமீது. அதிரையின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். கடந்த பல வருடங்களாக ASM குழுமத்தின் அங்கமாகிய ASM ட்ரான்ஸ்போர்ட் வழங்கி வரும் பேருந்து சேவை நமதூர் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயம். இதே நிறுவனம் வணிகப்பகுதியாக கருதப்படுகிற பட்டுக்கோட்டையில் 'ASM வாட்டர் சர்வீஸ்' என்ற பெயரில் புதிதாக இன்று காலை முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று பட்டுக்கோட்டை, அதிரை பகுதிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் ASM அப்துல் ஹமீது அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.
இதுகுறித்து கார் வாஷ் நிறுவனத்தின் உரிமையாளர் தொழில் அதிபர் ASM அப்துல் ஹமீது நம்மிடம் கூறுகையில்...
'எங்களிடம் சிறந்த முறையில் கார், வேன், ஆட்டோ, டூவீலர் மற்றும் அனைத்து வகை வாகனங்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த முறையில் வாட்டர் சர்வீஸ் வழங்க இருக்கிறோம். ஜெனேரட்டர் வசதியும் உண்டு. பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு :
பட்டுக்கோட்டை 04373 235751 / 9629254567
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா
குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
ஹமீது பாய் உங்கள் இந்த புதிய தொழில் சிறக்க வாழ்த்துக்கள், என்னையெல்லாம் கூப்பிட மறந்த்துட்டீங்க, காரணம் என்னிடம் தற்போது சல்லி காசு கிடையாது.
ReplyDeleteஎப்படியோ நல்லா இருங்க.