.

Pages

Wednesday, October 1, 2014

அதிரையில் மீனவர்கள் நடத்திய கண்டன பேரணி ! [ படங்கள் இணைப்பு ]

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து அதிரை ஏரிபுறக்கரை, கரையூர் தெரு, கீழத்தோட்டம் ஆகிய கிராமங்களின் மீனவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.

ஏரிபுறக்கரை கிராம மீனவ கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி பள்ளி சாலை வழியாக சென்று இறுதியில் கல்லூரி முக்கத்திற்கு வந்தடைந்தது.

இதையடுத்து கண்டன உரையை அதிமுக அதிரை நகர செயலாளர் பிச்சை நிகழ்த்தினார். பேரணியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதில் மீனவ கிராம பொதுமக்கள் மற்றும் அதிமுகனர் கலந்துகொண்டனர்.








1 comment:

  1. தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார் முதல் கொளத்தூர் மணி, என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.

    அம்மாவுக்கு எதிராக சதி', 'அம்மாவைப் பொய்வழக்கில் உள்ளே தள்ளிவிட்டார்கள்' என்ற கூக்குரல்களைச் சுற்றிலும் கேட்கும்போது, நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியோ, உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு ஜெயலலிதா உள்ளே போய்விட்டாரோ என்ற பிரமை ஏற்படுகிறது. கொஞ்சம் அழுத்தமாக நம்மை நாமே கிள்ளிப் பார்த்தால்தான், ஜெயலலிதா உள்ளே போனதற்குக் காரணம் உப்புச் சத்தியாகிரகம் அல்ல. ஊழல் வழக்கு என்ற உண்மை உறைக்கிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.