நடப்பாண்டில் அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம் நடத்திய சிறப்பு பயிற்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பேராசிரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இவர் ஒருவர் மட்டுமே பயிற்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேராசிரியை பரீதா பேகம் நம்மிடம் கூறுகையில்...
'பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து கலந்துகொன்டது நான் ஒருவர் மட்டுமே. மொத்தம் 21 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிகழும் 'மனித உரிமை மீறல்' குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக பெண் பாலியல் கொடுமைகள், சிறுவர் கொடுமை, சிறையில் அடைபட்டுள்ள கைதிகளுக்கு ஏற்படும் உரிமை மீறல்கள் குறித்தும், இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது' என்றார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக அளவில் நமது காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக மனித உரிமை குறித்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். மேலும் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மனித உரிமை பாடம் நடத்தி வரும் முதல் கல்லூரி என்ற பெருமையும் நமது கல்லூரி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் மேடம் !
ReplyDeleteஎங்க ஊர் 'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது அவர்களும் மனித உரிமை அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். அதே போல் மான் சேக் அவர்களும் இருக்கிறார். மனித உரிமை மீறலை எதிர்கொள்வது குறித்து இவர்களுடடையை ஆலோசனைகளையும் நீங்கள் பெறலாம். உதவியாக இருக்கும்.
ReplyDeleteசமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை பெற்ற தகப்பனாலையே நடக்கும் கொடுமை தினமும் அரங்கேற்றம் நடக்குது இதுக்கு காரணமென்ன என்று பார்த்தால் ஒன்று டாசுமாக்கிலிருந்து புல் மப்புல வந்திருப்பான் அல்லது சிந்து சமவெளி படம் பார்த்திருப்பான். இதனை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்குகிரார்கள் என்றால் இல்லை எனலாம்
ReplyDeleteநீங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவீர் என நம்புகிறோம்!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
தமிழகத்திலேயே தனியொரு நபராக, அதுவும் பெண்ணாக பல மாநில எல்லைகளைக் கடந்து வட இந்தியப் பகுதியில் அமையப் பெற்றிருக்கும் உ.பி மாநிலத்தின் ஒரு அங்கமாக இருக்கும் அலிகார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கான “மனித உரிமை” குறித்து நடத்தப்பட்ட சிறப்பு பயிற்ச்சியில் பங்கேற்றி விட்டு வந்திருக்கும் உங்களை மனதார வாழ்த்துவதில் நான் பெருமிதம் அடைகின்றேன்.
மனித உரிமைக்கு சமய சாயம் தெரியாது, இன பேதம் அறியாது, ஏற்றத் தாழ்வு கிடையாது, நிறங்கள் கிடையாது.
மனித உரிமைக்கு தெரிந்ததெல்லாம் மனிதம், அதாவது ஆண் பெண் இந்த இருவரையும் தவிர வேறு எதுவும் தெரியாது.
மனித உரிமையை முழுமையாக மதித்து, அறிந்த, தெரிந்து, இணைந்து, ஒன்று கூடி செயல்படவேண்டும். முதலில் மனித உரிமையை மதித்து நடக்கவேண்டும்.
சிறு பள்ளிப்பிராயம் முதல்கொண்டு மாணவச் செல்வங்களுக்கு மனித உரிமை சம்பத்தப்பட்ட விழிப்புணர்வுகளை கற்றுக் கொடுக்க வேண்டும், இதற்காக எல்லா ஆசிரியப் பெருமக்களும் முழு ஒத்துழைப்பு தர முன் வர வேண்டும்.
குடும்பத் தலைவர்களும் தங்கள் குடும்பங்களுக்கு மனித உரிமை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏதோதுக்கோ நேரங்களை வீணாக விரயம் செய்யும் இந்த மானிடம், ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் இது குறித்து சிந்தித்தாலே எவ்வளவோ போதுமானதாக இருக்கும். இப்படி பல கோணங்களில் பலர் சிந்தித்து வீறுகொண்டு எழுந்திருப்போமானால்! இந்த மனிதஇனம் ஒரு தனி அலாதியான புத்துணர்ச்சியை அடையும் என்பதில் ஒரு துளிகூட சந்தேகமில்லை என்பது என் கருத்து.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com