.

Pages

Friday, October 3, 2014

துபாயில் புதிதாக கட்டப்பட்ட ஜரூனி மஸ்ஜிதின் ஜூம்ஆ தொழுகையில் பலர் பங்கேற்பு ! [ படங்கள் இணைப்பு ]

துபாய் தெய்ராவில், தமிழ் பஜார் என்று அழைக்கப்படும் தமிழக முஸ்லீம்கள் அதிகம் வாழும் அயல் நாஸர் பகுதியில் அமைந்துள்ள, நைஃப் போலீஸ் ஸ்டேசன் நேர் எதிரில் அமைந்திருந்த பழைய ஜரூனி பள்ளியை இடித்துவிட்டு புதிய பள்ளியை கட்டும் பணி கடந்த 7,8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பள்ளிவாசல் துபையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜரூனி குடும்பத்தினரின் செலவில் கட்டப்பட்டு அவர்களின் பராமரிப்பில் இருந்து வரும் பள்ளிகளில் ஒன்றாகும்.

உள்ளும் புறமும சுமார் 2000 பேர்வரை தொழக்கூடிய வசதியுள்ள இப்பள்ளியில் பெண்களுக்கென தனி தொழுகை பகுதியும் உள்ளது. இன்று ஜூம்ஆ துவங்குவது குறித்த அறிவிப்புக்கூட A4 சைஸ் பேப்பரில் டைப் அடிக்கப்பட்டு பள்ளியின் சுவற்றில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஒட்டப்பட்டிருந்தது.

4 தினங்களுக்கு முன் திறக்கப்பட்ட இப்பள்ளியில் இன்று முதல் ஜூம்ஆ தொழுகையும் மீண்டும் துவங்கியது. இப்பள்ளி திறக்கப்பட்டபோதும் சரி, இன்று ஜூம்ஆ துவங்கிய போதிலும் சரியே எத்தகைய விழாக்களோ, ஆடம்பரங்களோ, இந்தியாவில் நாம் காண்பது போன்று திறப்பு விழாவை ஒட்டி நடைபெறும் வைபவங்களோ ஏதும் நடைபெறவில்லை மாறாக இமாம் வந்தார் பாங்கை சொன்னார் தொழுகையை நடத்தினார், சென்றார் என்ற அடிப்படையில் மிக எளிமையாக அமைந்திருந்தது.

துபாயிலிருந்து
அதிரை அமீன்







No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.