.

Pages

Monday, October 13, 2014

வெளிநாடுகளுக்கு அனுப்பபடும் கீழக்கரை 'தொதல்' !

பெயரைப் பார்த்து விட்டு, தமிழர்களுக்கு தொடர்பில்லாத ஏதோ ஒரு உணவு போல...என்று நினைத்து விடாதீர்கள். இது ஐஎஸ்ஐ முத்திரை குத்தப்பட்ட தமிழர்களின் இனிப்பு வகை. கடலோர மாவட்டங்களில் உள்ள பகுதிகளான‌ கீழக்கரை, அதிராம்பட்டிணம், மரைக்காயர் பட்டிணம், காயல்பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழுபவர்கள் வர்த்தக ரீதியாக இலங்கைக்குச் சென்று வந்ததன் வழியாக அங்கு இருந்த பலவகையான உணவு வகைகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது.அதில் ஒன்றுதான‌ தொதல் எனப்படும் இனிப்பு வகை.

யாழ்ப்பாணத்து தமிழர்கள் உணவில் ஏதாவது ஒருவகையில் தேங்காய் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். காரணம்,அங்கு விளையும் குவியல், குவியலான தேங்காய்தான். அந்த வகையில் தேங்காய் அதிகம் சேர்க்கப்படும் தொதலில் பூர்வீகம் யாழ்ப்பாணம் என்கிறார்கள்.

அதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சுற்றி தென்னந்தோப்புகள் அதிகம். தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் முக்கிய இனிப்பு பண்டமாக தொதல் விளங்குகிறது.

தொதலின் தொழில்நுட்பத்தை அறிந்து கீழக்கரையை சேர்ந்த செல்லக்கனி என்பவர் பழைய குத்பா பள்ளித் தெருவில், 45 வருடங்களுக்கு மேலாக குடிசைத் தொழில் போல தொதல் தயாரித்து விற்பனை செய்து நல்ல வரவேற்பை பெற்று இப்பகுதியில் தொதல் தயாரிப்பின் முன்னோடியாக திகழ்கிறார். தற்போது கீழக்கரையில் பலர் வீடுகளில் குடிசைத் தொழிலாகத் தொதலை செய்து வளைகுடா நாடு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.

ஒரு கிலோ தொதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 250 வரையிலும் விற்கப்படுகின்றது. இந்த தொதல் கடைகளில் கிடைக்காது.ஒரு மாதம் வரை கெடாது இத்தொழிலில் ஈடுபட்டு வரும் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்,வெளிநாடு செல்பவர்கள் தங்களின் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக கிலோ கணக்கில் வாங்கி செல்கிறார்கள்.இதன் சுவை அதிகமாக இருப்பதால் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் போன் மூலம் ஆர்டர் தருகிறார்கள் என்றார்.

செய்முறை :
பச்சரிசி 1 கோப்பை, 5 தேங்காய், சர்க்கரை 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம், 4 மேசைக் கரண்டி ஜவ்வரிசி (அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு) ஏலக்காய் தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் (6 டம்ளர்), சீனி, பனை வெள்ளம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.

பின்னர் 2 டம்ளர் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும். பின்னர் ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.

அல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் கேக்குகள் போன்று வெட்டிப் பரிமாறலாம்.

நன்றி : தினகரன்

1 comment:

  1. கீழக்கரை தொதல் தான் தெரியுமா? நம்ம வூரு? கடற்கரை தெரு பெண்கள் மார்கெட்டில் ஹசன் லெப்பை என்பவர் தொதல் வியாபாரம் செய்ததை யாரும் மறக்க இயலாது, 200 கிராம் மதிக்கத்தக்க தொதல் விலை அப்போ 50 பைசா, 2 சாப்பிட்டால் போதும் பசி அடைங்கி விடும் அவ்வளவு சுவையாக இருக்கும்,

    இவருடைய வியாபாரம் கந்துரீலும் பார்த்து இருக்களாம். ரிசிப்பி கேட்கிறீங்களா? அது வந்து .........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.