.

Pages

Sunday, September 27, 2015

இல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்!

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2.
வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3.
விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4.
கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5.
உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6.
விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8.
செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9.
இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்
அனுசரித்துப் போகுதல்
மற்றவர்களை மதித்து நடத்தல்.

10
வது அறிவுரை.

விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், ‘டைவர்ஸ்கேட்டு வரும் ஜோடிகள் டைவர்ட்ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

1 comment:

  1. விவாகரத்து கேட்பவர்களின் காரணங்களை கேட்டால் அவை காமெடியாக த்தான் இருக்கும், தன் மனைவி திருமணத்திற்கு பிறகு குண்டாகி விட்டால் என்றும்; இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக நடத்த முடியவில்லை; அதிகம் வேலை செய்ய முடியாததால், வீட்டு வேலைகளை என் தலையில் சுமத்துகிறார் என்று குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார், திருமணத்துக்கு பின், மனைவியின் உடல் எடை அதிகரித்து விட்டது என்ற காரணத்தைக் கூறி, விவாகரத்து பெற முடியாது என உத்தரவு பிரபிக்கப் பட்டது; இது மும்பையில் நடந்தது,
    அதிரையில் இரு சம்பந்திகளிடையே பிரச்னை ஏற்பட்டாலே அது விவகாரத்தில் முடிகிறது என்பது வேதனையான விஷயம்.

    விவாகரத்து என்ற வார்த்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காதீர்கள்,அதுவே உங்களுடைய சகோதரியாக இருந்தால்,சிந்தித்து பாருங்கள்,அமைந்த,கிடைத்த வாழ்க்கையை சந்தோசமாக இந்த உலகில் வாழ்ந்து நம் சந்ததியினருக்கும் நம் பாரம்பரிய கலாச்சாரத்தை கற்பியுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.