.

Pages

Wednesday, September 16, 2015

இறுதி கட்டத்தை எட்டியது: அதிரையின் 8 ஊரணிகளுக்கு ₹ 43.50 லட்சம் மதிப்பில் நீர் நிரப்பும் பணி !

அதிரை பேரூராட்சி பகுதியில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணிக்கான வேலைகள் துவங்கியது. அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

அதிரை பேரூராட்சி பொது நிதியிலிருந்து  ₹ 43.50 லட்சம் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டதையடுத்து கடந்த சில மாதங்களாகக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் இறுதி பணியாக இன்று மின் இணைப்பு வழங்கப்பட்டன.

இதையடுத்து இன்னும் சில தினங்களில் ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணி துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
 
 

7 comments:

  1. அரசின் திட்டங்களை பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார் நமதூர் சேர்மன், அரசின் விதி 110 கீழ் வாசிக்கப் பட்ட திட்டங்களில் நமதூருக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வருவதை இவர் பதவியேற்றதிலிருந்து தெரிகிறது, குடிநீர், பொதுச்சுகாதாரம் நிறைவேற்றுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு தான் இவருக்கு தேவை, நிர்வாகத்தின் தூய்மை,
    பொதுவாழ்வில் செய்த பணிகளுக்காக வரும் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க அரசு பரிசிலிக்க வேண்டும். தொடரட்டும் சேவை , வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அரசின் திட்டங்களை பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார் நமதூர் சேர்மன், அரசின் விதி 110 கீழ் வாசிக்கப் பட்ட திட்டங்களில் நமதூருக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வருவதை இவர் பதவியேற்றதிலிருந்து தெரிகிறது, குடிநீர், பொதுச்சுகாதாரம் நிறைவேற்றுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு தான் இவருக்கு தேவை, நிர்வாகத்தின் தூய்மை,
    பொதுவாழ்வில் செய்த பணிகளுக்காக வரும் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க அரசு பரிசிலிக்க வேண்டும். தொடரட்டும் சேவை , வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இது போருக்காத் சில சைத்தான் வேதம் ஓதா காத்து இருக்குது

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சேர்மன்........

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சேர்மன்........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.