அமீரகம் துபையில் இன்று புனித தியாகத் திருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. துபாய் நேரப்படி காலை 6.40 மணிக்கு ஹஜ்ஜுப் பெருநாளைக்கான தொழுகை சிறப்புடன் நடந்தது. டேரா துபை ஈத்காவில் நடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இங்குள்ள அதிகபட்ச பள்ளிவாசல்களில் பெருநாளுக்கான தொழுகை நடத்தப்பட்டாலும், துபை டேரா பகுதியில் வசிக்கும் நம் அதிரைச்சகோதரர்கள் அநேகமானோர்களும் மற்றும் பிற ஊர்க்காரர்களும், பிற நாட்டவர்களும் இங்குள்ள ஈத்கா மைதானத்தில் தொழுவதற்கு விரும்பி வருவார்கள். காரணம் அனைத்து நண்பர்கள் சொந்தபந்தங்களை ஒன்றாக ஓரிடத்தில் சந்தித்து பெருநாள் வாழ்த்தினை பகிர்ந்து கொள்ள ஏற்ற இடமாக நகருக்கு மத்தியில் இந்த டேரா ஈத்கா மைதானம் அமைந்துள்ளது.
சுமார் ஒரு ஐம்பதாயிரம் பேர் வரை கலந்துகொண்ட இந்த பெருநாள் தொழுகையின் காலைப்பொழுதினில் அனைவரும் புத்தாடையுடன் தொழுகையை முடித்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாஃபா செய்து கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
துபையில் மகிழ்வுடன் கொண்டாடப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் வண்ணப்படங்கள் இதோ...
All frnds eid mubark
ReplyDelete