சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார்(வயது35)என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இரண்டு மாதங்களாகியும் அவரது சடலம் ஊருக்கு அனுப்பப்படாமல் இருந்த தகவல் அறிந்து அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பிரிவை சேர்ந்த நெல்லை ஜின்னா ம ற்றும் அதிரை ரியாஸ் அகமது ஆகியோர் இறந்தவரின் ஸ்பான்சர் அப்துல்லாஹ் முகம்மது யூசுப் அல்சாஹர் அவர்களுடன் இணைந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து செல்வகுமார் சடலத்தை அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அல்ஹஸ்ஸாவிலிருந்து சடலம் தம்மாம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தம்மாமிலிருந்து இன்று இரவு 9மணிக்கு லங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாளை(திங்கட்கிழமை) காலை 8.50 மணிக்கு திருச்சி வந்தடையும் என்ற தகவலையும் இறந்தவரின் ஊரை சேர்ந்த முத்துசாமி சுந்தர் என்பவர் மூலம் செல்வகுமாரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறையுடன் இணைந்து சவூதி அரேபியாவை சேர்ந்த அரேபியர் அப்துல்லாஹ் முகம்மது யூசுப் செல்வக்குமார் சடலத்தை ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து செலவுகளையும் தாமே ஏற்றுக்கொண்டு விமான நிலையம் வரை சடலத்தை அனுப்பி வைக்கும் வரை உடனிருந்து அனைவரையும் நெகிழ செய்தார்.இதே போல் கடந்த 9ந்தேதி பெரம்பலூர் விசுவகுடி கிராமத்தை சேர்ந்த ஜமால் முகம்மது(வயது32)என்பவர் ரியாத் ஹைவே ரோட்டில் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியானார்.
13ந்தேதி அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்று ஜின்னா மற்றும் ரியாஸ் அகமது அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கடந்த 18ந்தேதி(வெள்ளிக்கிழமை)இறந்த ஜமால் முகம்மது ஜனாஸாவை நல்லடக்கம் செய்தனர்.இறந்தவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என வேறுபாடு காணாமலும்,மற்றொரு தமிழர் ஜமால் முகம்மது உடல் நல்லடக்க நிகழ்வுக்காகவும் தமது மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து மதம் கடந்த மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும். என்ற சமூக அக்கறையுடன் கம்பெனியில் விடுப்பு எடுத்து தங்களது கடமையை செய்த நெல்லை ஜின்னா மற்றும் அதிரை ரியாஸ் அகமது ஆகியோரை இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி மற்றும் மாநில பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா,கிளைத்தலைவர் மயிலாடுதுறை நாசர்,நாச்சிகுளம் யூசுப்கான் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்தி பாராட்டினர்.
நன்றி:தினகரன்
சவுதியில், வேகமான காற்றினால் கிரேன் முறிந்து 100 க்கும் மேற்பட்ட ஹாஜிமார்கள் பலியான துயரசம்பவம் நடந்து சமுதாயமே சோகத்தில் மூல்கிருக்கும்பொழுது சமூக வலைதளத்தில் RK ராம்கி, வேல்முருகன் இவர்களின் உரையாடலில் " செத்தவன் துளுக்கான இருந்தா அவன் எந்த நாட்ட சேர்ந்தவனா இருந்தா என்ன பக்கத்து வீட்டு துலுக்கன் அங்க செத்து இருந்தாலும் எனக்கு அதுல சந்தோசம் தான் ஜீ " ....... இப்படி தீய சக்திகள் ,வக்கிர புத்திக் கொண்டவர்கள் செய்தி பரப்புவதை நாம் படித்திருந்தாலும் மனிதநேயத்தை காப்பதில் இஸ்லாமிய சமுதாயம் முனைப்புடன் இருப்பதை மேற்கொண்ட சம்பவம் உணர்த்துகிறது. தங்களது கடமையை செய்த நெல்லை ஜின்னா மற்றும் அதிரை ரியாஸ் அகமது ஆகியோரின் செயல் பாராட்டக்குரியது, அல்லாஹ் நன்மை தருவான்....
ReplyDeleteபெரம்பலூர் செல்வகுமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெருவித்துக் கொள்கிறேன்.