இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூர் எஸ்.பி. ஜெயசந்திரன் தலைமையில் போலீஸ் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. 2வது நாளாக நேற்று மாலை போலீஸ் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
செம்படவன் காடு ரயில்வே கேட்டிலிருந்து துவங்கிய போலீஸ் அணிவகுப்பிற்கு எஸ்.பி.ஜெயசந்திரன் தலைமை வகித்தார். ஏராளமான போலீசார் அணிவகுத்து சென்றனர்.
அணிவகுப்பு ஊர்வலம் பட்டுக்கோட்டை சாலை, பங்களாவாசல், கொய்யா முக்கம். நியூபஜார் வழியாக பழையபேருந்து நிலையம் சென்று திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பதற்றமான பகுதியாக கருதப்படும் ஆசாத்நகர் சென்றது. அங்கு கலெக்டர் மதிவாணன் போலீஸ் அணி வகுப்பை பார்வையிட்டு, பின்னர் எஸ்.பி. ஜெயசந்திரனிடம் தீவிர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்ட போலீஸ் அணிவகுப்பு அதே வழியாக வந்து மன்னார்குடி சாலையில் சென்று டி.எஸ்.பி அலுவலகம் சென்றடைந்தது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை,முத்துப்பேட்டை
முத்துபேட்டை விநாயகர் ஊர்வலத்திலும் இப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் ..???
ReplyDeleteமுத்துபேட்டை காவல்துறைக்கு அதிகம் கவனம் மற்றும் எச்சரிக்கை அவசியம் .
பழனியில் இந்து முன்னனி அராஜகம் :-
கடந்த 20.09.15 ஞாயிறு அன்று இந்து முன்னனி மற்றும் VHP சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது இதில் வண்டி எண் இல்லாத ஒரு ட்ராக்டர் வண்டியிருந்து இந்து முன்னனி கயவர்களால் கற்கள் பழனி சின்னப் பள்ளிவாசலை நோக்கி எரியப்பட்டதில் ஜமாதார்கள் 3பேர் காயமடைந்தனர்.
ஊர்வலத்தில் 43 சிலைகள் அமைதியாக சென்றது பிறகு வந்த 44 வது வண்டியிலிருந்து சம்பவம் மாலை சுமார் 7:15 மணியளவில் நடந்தது. காவல் துறைகள் இருந்தும் இது போன்ற சம்பவங்கள் திராணியுடன் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் வழக்குகள் பதியாமலும், நடவடிக்கைகள் எடுக்காமலும் கண்துடைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றது பழனி காவல் துறை.
இன்னும் இன்றும், நாளையும் என்ன நடக்குமோ என்று பழனியில் பதட்டம் நிலவுகிறது.
- கண்டனத்துடன்
கீரனூர் குரல்