இந்நிலையில் இன்று மதியம் ராஜஸ்தானில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட ஒட்டங்கள் வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக அதிரைக்கு கொண்டு வரப்பட்டன. காற்றோட்டமான பகுதியில் ஒட்டகங்களை மேயவிட்டு அதற்கு தேவையான தீனிகளும் கொடுத்து வருகின்றனர். நல்ல திடகாத்திரமாக காணப்படும் ஒவ்வொரு ஒட்டங்களும் சராசரியாக 300 முதல் 350 கிலோ வரை எடையைக் கொண்டுள்ளது. ஒட்டகங்கள் வருகை குறித்து தகவலறிந்த ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக பார்வையிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து த.மு.மு.க நகர நிர்வாகிகளிடம் பேசிய வகையில்...
'வழக்கம் போல் இந்த வருடமும் கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அதிரை கிளையின் சார்பில் முடிவு செய்துள்ளோம். இதற்காக நல்ல திடகாத்திரமான ஒட்டங்கள், மாடுகள் தகுதியுள்ள நபர் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டகத்தின் ஒரு பங்கின் விலை ரூபாய் 12,000/- எனவும், மாட்டின் ஒரு பங்கின் விலை ரூபாய் 1400/- எனவும் நிர்ணயம் செய்து பங்குகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகிறது. இதில் கிடைக்கும் தொகை முழுவதும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்படும்' என்றார்கள்.
மாஷா அல்லாஹ்.....
ReplyDelete