.

Pages

Saturday, September 26, 2015

பிலால் நகர் கோரிக்கையை சட்டசபையில் எழுப்பிய எம்எல்ஏ ரெங்கராஜன் !

அதிரை பேரூர் தமாகா சார்பில் வைக்கப்பட்ட அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை தமாகா தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், நமது சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களிடம் சட்டசபையில் பேச வலியுறுத்தி இருந்தார்.

இதில் அதிரையின் பெரும்பாலான இடங்களில் ஆபத்தான நிலைமையில் மின்கம்பங்கள் அமைந்திருப்பதாகவும், மேலும் பிலால் நகரின் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை மாற்று இடத்தில் அமைத்து கொடுக்கவும், பழுதடைந்த மின்கம்பிகள், மின்கம்பங்களை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

முன்னதாக இதுதொடர்பாக பிலால் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அதிரை அமீன், கேஎம்ஏ ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் குரல் கொடுத்து இருந்தனர். இதுதொடர்பாக அதிரை நியூஸ் உள்ளிட்ட அதிரை இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் அதிரை தமுமுக பிலால் நகர் கிளையின் சார்பிலும், எஸ்டிபிஐ கட்சியின் சார்பிலும் கோரிக்கை விடப்பட்டன.

இந்நிலையில் கடந்த [ 23-09-2015 ] அன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதில் நமது சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு இதுதொடர்பாக குரல் கொடுத்தார். இதில் அதிரை வளர்ந்து வரும் பகுதி என்றும், இங்கு பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், குறிப்பாக பிலால் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. அரசு இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா ? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் சம்பந்தபட்ட பகுதிகளில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு குறைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.