அதிரை அடுத்துள்ள மல்லிப்பட்டினத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது.
அதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் உமர்புலவர் தெருவை சேர்ந்தவர் சர்புதீன்( வயது 52). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகினை மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கரையில் இருந்து சுமார் 6 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். சனிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தயாராக இருந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் படகு திடீரென தீப்பற்றி எரிந்து, கடலுக்குள் மூழ்கியது.
தகவல் அறிந்து வந்த சர்புதீன் சேதுபாவாசத்திரம் காவல்துறை, கடலோர காவல் குழுமம் ஆகியவற்றில் புகார் செய்தார். விபத்தில் எரிந்த விசைப்படகின் மதிப்பு ₹ 15 லட்சம் எனக் கூறப்படுகிறது. சதிவேலை காரணமாக படகு தீப்பற்றியதா இல்லை வேறு ஏதும் காரணமா என காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க மாநிலத்தலைவர் மல்லிப்பட்டினம் தாஜூத்தீன், சேக் தாவூத் ஆகியோர் பார்வையிட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.