.

Pages

Saturday, September 26, 2015

திருவாரூர் - காரைக்குடி ரயில் திட்டம் விரைந்து முடிக்க திமுக தேர்தல்-2016 அறிக்கையில் குறிப்பிட கோரிக்கை !

திமுக - 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் இன்று மாலை தஞ்சை - நாகை சாலையில் உள்ள குருதயாள் சர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். குழு பொறுப்பாளர்களாக ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.கனிமொழி, பேராசிரியர் ராமசாமி, சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர்.

எதிர்வரும் 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் அனைத்து தரப்பினருடைய கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், வர்த்தகர்கள் சங்கம், ரோட்டரி சங்கங்கள், லயன்ஸ் சங்கம், மீனவர் சங்க பிரதிநிதிகள், நெசவாளர் சங்கங்கள், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம், மருத்துவர் சங்கம், பொறியாளர் சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கைவினை தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து பொதுநல அமைப்புகளும் கலந்து கொண்டு கருத்துக்களை நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் தெரிவித்தனர்.

கூட்டத்தில் திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், பேரூர் துணை செயலாளர் அன்சர்கான், வார்டு பொறுப்பாளர் நிஜாமுதீன் மற்றும் மீனவ சங்க பொறுப்பாளர் அதிரை சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிரை பேரூர் திமுக சார்பில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் திமுக தேர்தல்-2016 அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை மனு குழுவினரிடம் வழங்கப்பட்டது.

மேலும் மீனவர் சங்க பொறுப்பாளர் அதிரை சுப்பிரமணி சார்பில் கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு ஆகிய 4 மீனவ கிராமங்களின் வடிகால்களை தூர் வாரி சாலை வசதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.