அதிரை புரோட்டா என்றாலே நா ஊறும் அளவுக்கு தனி ருசி அதுவும் இரவு நேரக் கடைகளில் விற்பனையாகும் பொரிச்சப் புரோட்டாவிற்காக அலைமோதும் கூட்டங்கள் ஏராளம்.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை இன்று அதிரையில் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரத்தியோகமாக தயாரிக்கப்படும் காலை உணவு பதார்த்தங்களில் புரோட்டாவும் முக்கிய அங்கம் வகிக்கும்.
பெருநாள் காலை உணவுக்காக விதவிதமான பதார்த்தங்கள் தயாரிப்பதில் பெரும்பாலானோர் கூடுதல் நேரம் செலவழிப்பதால், சொந்தமாக புரோட்டா தயாரிப்பதை பெரும்பாலானோர் தவிர்க்கின்றனர். இதற்காக உணவங்களில் ஆர்டர் செய்து புரோட்டாக்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பெருநாள் தினத்தன்று அதிரையில் அமைந்துள்ள குறிப்பிட்ட சில கடைகளில் மாத்திரம் பெருநாள் புரோட்டாக்களை தயார் செய்து விற்பனையில் ஈடுபடுவார்கள். அதுவும் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் புரோட்டக்களின் விற்பனை முழுதும் தீர்ந்துவிடும்.
இதுகுறித்து சிறப்பு விற்பனையில் ஈடுபடும் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் அமைந்துள்ள சாவண்ணா உணவகத்தின் உரிமையாளர் நம்மிடம் கூறுகையில்...
ஒவ்வொரு பெருநாள் தினத்தன்றும் இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். பெருநாள் முந்திய நாட்களில் வாடிக்கையாளர்களிடம் புரோட்டா ஆர்டர் பெற்று அதற்கேற்றார் போல் புரோட்டாக்களை பிரத்தியோகமாக தயார் செய்து அதிகாலையில் சுடச்சுட வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பெருநாள் தினத்தன்று எங்கள் உணவகத்தில் 3000 புரோட்டாக்கள் விற்பனையாகும்' என்றார்.
அதே போல் அதிரை பட்டுக் கோட்டை தஞ்சை திருச்சி மதுரை சென்னை கோவை ஆகிய ஊர்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் அதிரையர்கள் அதிகம்பேர் படுத்த்துக் கிடக்கிறார்கள். அப்பாயின்ட்மென்ட் வாங்கவும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் புரோட்டாவின் பங்கும் அளப்பரியது.
ReplyDeleteகல்யாணம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் பரோட்டா முதலிடம் வகிக்கும் வரை நமது உடல் ஆரோக்கியம் பெறப்போவதில்லை. நமது மருத்துவச் செலவுகளும் குறையப் போவதில்லை.
சரியாக சொன்னீர்கள் காக்கா
Delete