.

Pages

Sunday, September 27, 2015

அதிரையர்களின் மனிதநேயம் !

அதிரையில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர் கதிஜா பீவி ( வயது 65 ). மணமேல்குடியை சேர்ந்த இவர் அதிரையில் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் மிகவும் குன்றிய நிலையில் சிகிச்சைக்காக அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவரை நமதூர் வழக்கறிஞர் அப்துல் முனாப், சமூக ஆர்வலர்கள் ஜமால் முஹம்மது, ஹசன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று மரணமடைந்த இவரை தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அஹமது ஹாஜாவின் ஏற்பாட்டின் பேரில் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடல் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கமாகிய பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு கவுன்சிலர் செளதா அஹமது ஹாஜா அவர்கள் குளிப்பாட்டும் கடமையை செய்தார். இதையடுத்து இன்று காலை தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் அதிரையர்கள் கலந்துகொண்டனர். ஜனாஸா நல்லடக்கத்தின் செலவுகளை அதிரை தமுமுகவினர் ஏற்றனர். மேலும் முஹம்மது பாருக், நெய்னா முஹம்மது ஆகியோர் உடனிருந்து பணிகளை செய்தனர்.
 
 
 
 

7 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. Inna lilahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    weldon tmmk

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.