.

Pages

Wednesday, September 16, 2015

அதிரை அருகே இடுப்பில் வளரும் 5 கிலோ கட்டியுடன் அவதிப்படும் ஏழை மாணவி: அரசு உதவ வேண்டுகோள் !

அதிரை அடுத்துள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு ஏரிக்கரை சாலையில் வசிப்பவர் நல்லத்தம்பி இவரது மனைவி லலிதா. இருவரும் கூலித் தொழிலாளியான இவர்களுக்கு சரன்யா, ரம்யா ஆகிய இரண்டு மகள்கள். இதில் இரண்டாவது மகளான ரம்யா(20). கடந்த வருடம் முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரம்யா 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது இடுப்பின் பின் பகுதியில் கட்டி ஒன்று உருவானது.

இதனையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு ஆப்ரேஷன் மூலம் அகற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற ரம்யாவிற்கு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் அதே பகுதியில் ஒரு கட்டி உருவானது. அப்பொழுதும் அதே மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று அகற்றினார். இந்த நிலையில் கடந்தாண்டு பத்தாம் பகுப்பு படிப்பை துவங்கிய நேரத்தில் மீண்டும் ரம்யாவிற்கு அதே பகுதியில் கட்டி உருவானது. மருத்துவ உதவிப் பெற்று வந்த ரம்யாவின் பின்பகுதியில் நாளுக்கு நாள் கட்டியின் அளவு பெரியதாகிக் கொண்டே போனதால் நடக்கவும், உட்காரவும் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ரம்யா சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர் ஆபத்தான வகையில் சுமார் 5 கிலோவிற்கு மேல் எடைக் கொண்ட கட்டியாக இருப்பதால் தனியார் மருத்துவ மனையில்தான் சிகிச்சை பெற்று அகற்ற வேண்டும் என்று அங்குள்ள டாக்டர்கள் கைவிரித்தனர்.

இதனையடுத்து அவரது பெற்றோர் ரம்யாவை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்து டாக்டரிடம் ஆலோசனை நடத்தினர். இதில் ரம்யாவின் பரிதாப நிலையைக் கண்ட தனியார் மருத்துவர் அந்த கட்டியை அகற்ற குறைந்தது ரூபாய் 2 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளார். அந்த அளவு பணம் தோதுப்பன்ன முடியாத பெற்றோர் ரம்யாவை அழைத்துக் கொண்டு வீடுத்திருப்பினர். சுமார் 1 வருடமாக மருத்துவ செலவுக்கு பணம் சேகரிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் மத்தியில் மருத்துவ உதவிக்கு ஏங்கும் மாணவி ரம்யாவின் இடுப்பு பகுதியில் உருவான கட்டி 5 கிலோவிற்கு மேல் வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்பொழுது அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டே வருகிறது. மாணவியின் கால், கைகள் மற்றும் உடலும் மெலிந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மானவி ரம்யா தனது இயற்கை உபாதைகளை தனியாக சென்று கழிக்கக்கூட முடியாத அளவில் சிரமம் படுகிறார். தினமும் சாப்பிடக்கூட முடியாத நிலையில் பசிப்பட்டினியோடு உயிருக்கு போராடி வரும் மானவி ரம்யாவை அவரது தாய் லலிதாதான் வேலைக்கு செல்லாமல் மாணவியுடன் இருந்;து கவணித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த ஏழை மாணவியின் பரிதாப நிலையை தமிழக அரசு உணர்ந்து மாணவிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து குணமாகி மீண்டும் மாணவி ரம்யா பள்ளிக்கு செல்ல வேண்டுமென்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

1 comment:

  1. செய்தி அறிவித்த நன்னெஞ்சங்களுக்கு மனதார வாழ்த்துக்கள் !!!!!!
    அரசு மருத்துவ கல்லூரியிலிருந்து பார்க்க முடியாது, தனியாரிடம் சென்று பாருங்கள் என்று சொல்லி அனுப்பியதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
    இம்மாதிரியான கேசுகளை பார்பதற்கு தானே அரசு ( மக்கள் ) மருத்துவ மனைகள் ?
    சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்புக்கள் முயற்சி செய்து, வசூல் செய்யாமல் அரசு மருத்துவ மனையிலேயே மருத்துவம் செய்ய முயற்சிக்கலாமே !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.