.

Pages

Tuesday, September 22, 2015

முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நேரடி ரிப்போர்ட் !

முத்துப்பேட்டை ஒன்றிய நகர இந்து முன்னணி சார்பில் 23-ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம்  நடைபெற்றது. ஜாம்புவானோடை வடகாடு சிவன் கோவிலிருந்து ஊர்வலம் மதியம் 2 மணிக்கு புறப்பட்டது. இதற்கு தேசிய பாதுகாப்பு பேரவை தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், மாவட்ட பா.ஜ.க எஸ்.சி அணித் தலைவர் ஓவரூர் குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் ராமஜெயம், அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் நா.முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா ஆகியோர்; கலந்துக் கொண்டு பேசினார்.

ஊர்வலத்தில் உப்பூர், தில்லைவிளாகம், ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது. பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கோட்ட இளைஞர் அணி செயலாளர் பொருப்பாளர் ராமலிங்கம், மாவட்ட முன்னால் செயலாளர் குமரவேல் ஆகியோரது தலைமையில் ஊர்வலம் சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரான் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத் நகர் சென்றது. அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, ரயில்வே கேட் வழியாக செம்படவன் காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இரவு 7.30 மணிக்கு கரைக்கப்பட்டது.

பின்னர் அங்கு நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் நா.முருகானந்தம், முன்னால் வேதராண்யம் எம்.எல்.ஏ. எஸ்.கே.வேதரத்தினம், திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டை சிவா, நாகை மாவட்ட தலைவர் வரதராஜன், ஒன்றிய தலைவர் தமிழ்செல்வம் ஆகியோர் பேசினர். முடிவில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக ஊர்வல பாதையை முழுவதும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஊர்வலத்தை 100க்கும் மேற்பட்ட வீடியோக் கேமராக்கள்; எடுக்கப்பட்டது. ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. சாலை இருபுரங்களிலும் தடுப்பு வேலிகள், ஆயிரக்கணக்கான பேரிக்காடு அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தப்பட்டது.

ஊர்வலத்தில் திருச்சி சரக ஐ.ஜி.ராமசுப்பிரமணியன் மேற்பார்வையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி(பொறுப்பு) பெரியய்யா, திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன்;, தஞ்சை எஸ்.பி.தர்மராஜ், நாகை எஸ்.பி.அபிநவ் குமார், கரூர் எஸ்.பி. ஜோசி நிர்மல் குமார், அரியலூர் எஸ்.பி.ஜியாவுல் ஹக்  ஆகியேரது தலைமையில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி படை, பட்டாளியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

திருவாரூர் கலெக்டர் மதிவாணன், டி.ஆர்.ஓ. மோகன்ராஜ், மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் பழனி வேல் மற்றும் நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி பகுதி தாசில்தார்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஊர்வலத்தில் சென்றனர். மேலும் முத்துப்பேட்டை சுற்று புறப்பகுதியில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் தீவர சோதனையில் ஈடுப்பட்டனர். மிகவும் பரபரப்பாகவும் பதற்றத்துடன் துவங்கிய ஊர்வலம் சரியான நேரத்தில் துவங்கி சரியான நேரத்தில் அமைதியாக முடிந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.