.

Pages

Wednesday, September 23, 2015

பெருநாள் பரபரப்பில் அதிரை !

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை நாளை [ 24-09-2015 ] காலை தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அதிரையின் பிரதான பள்ளிகளில் பெருநாள் தொழுகை நடத்தப்படும். மரைக்கா பள்ளியில் 6.30 மணிக்கும், செக்கடிப் பள்ளி, முகைதீன் ஜும்மா பள்ளி ஆகிய பள்ளிகளில் காலை 7.30 மணிக்கும்,  பிலால் நகர் பள்ளியில் 7.45 மணிக்கும், பெரிய ஜும்மாப் பள்ளி, அல் அமீன் பள்ளி, தக்வா பள்ளி, புதுப்பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, தரகர் தெரு [ ஆஷாத் நகர் ] ஜும்மா பள்ளி, மேலத்தெரு அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளி, AJ பள்ளி ஆகிய பள்ளிகளில் காலை 8 மணிக்கும் பெருநாள் தொழுகை நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் தொழுகைக்கு முன்னர் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை ECR ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் பெருநாள் காலை சரியாக 7.30 மணிக்கு நடைபெறும் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து வருடந்தோறும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இந்தவருடம் புதிதாக காட்டுப்பள்ளி அருகே கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் காலை சரியாக 7.30 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநாள் அறிவிப்பை தொடர்ந்து அதிரையில் உள்ள அனைத்து மஸ்ஜித்களும் மின்னொளியில் களைகட்டி காணப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக ஜவுளிக்கடைகள், தொப்பிக்கடைகள், இறைச்சிகடைகள், காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் சுவிட் கடைகள் ஆகியவற்றில் வியாபாரங்கள் பரபரப்பாகி உள்ளன. சலூன் கடைகளில் சிறுவர் - பெரியவர் - இளைஞர் கூட்டம் அலைமோதுகின்றன. புதிதாக தைய்க்க கொடுத்துள்ள உடைகளை வாங்குவதற்காக டைலர் கடைகளில் கூட்டங்கள் கூடுதலாக காணப்பட்டது. மஸ்ஜீதுகளில் தக்பீர் ஒலிகள் ஓங்கி ஒலித்துக்கொண்டுருக்கின்றன.

நகரில் முக்கிய பகுதிகளின் பிராதன சாலைகள் பரபரப்பாக காணப்படுகின்றன. அதிரை மக்கள் தங்களின் மகிழ்ச்சியை உற்றார் - உறவினர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
* File photos

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.