அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
சமீபத்தில் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் மூலம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாக கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகளாக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தரகர் தெரு மஹல்லாவாசிகள் அனைவருக்கும் அமீரக தரகர் தெரு அமைப்பின் சார்பில் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் அமீரக தரகர் தெரு அமைப்பின் மாதாந்திர கூட்டம் துபாயில் நடைபெற இருக்கிறது.
தேதி/நாள்: 24-09-2015, வியாழக்கிழமை,
நேரம்: மாலை 6 மணி
இடம்: துபாய் தேராவில் சகோதரர் ஜாஹிர் உசேன் அவர்களின் தங்குமிடம்
அமீரகத்தில் வசிக்கும் தரகர் தெரு மஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்
இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அமீரக தரகர் தெரு அமைப்பு
அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
ReplyDeleteஅதிரை அமீரக ஆசாத் நகர் ( தரகர் தெரு ) அமைப்பின் மாதாந்திர கூட்டம் இறைவன் அருளால் இனிதே நடைபெற இறைவனிடத்தில் துஆ செய்கிறேன்.
அமீரகத்தில் வசிக்கும் ஆசாத் நகர் ( தரகர் தெரு ) சகோதரர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் பங்கேற்று தங்களின் ஒத்துழைப்பையும் மேலான கருத்துக்களை கூறி அதணை அடிப்படையாகக் கொண்டு தெரு நலன் சார்ந்த நல்ல தீர்மானத்தை எடுத்து அதை செயல் வடிவம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.......