தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கு வசதியாக இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதிரையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறிப்பாக மேலத்தெரு சூனா வீட்டு பள்ளிக்கூடம், நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளிக்கூடம், காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள 1 ம் நம்பர் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று செப்டம்பர் 20-ம் தேதி வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் சிறப்பு முகாம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் புதிய வாக்காளர்கள், தங்கள் பெயரை சேர்க்க இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடர்பாக உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வாக்காளர்கள் வழங்கலாம்.
அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு முகாம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஆன்-லைன் மூலமும் www.elections.tn.gov.in/eregistration விண்ணப்பிக்கலாம். இந்த வசதியை வாக்காளர்கள் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.