பெருநாள் பண்டிகை நாளை காலை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதிரையில் உள்ள இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் குர்பானி ஆடு விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முழு ஆடுகளாகவும், எடை வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆடுகளும் சராசரியாக 16 முதல் 30 கிலோ வரை எடையளவு கொண்டுள்ளது. முழு ஆடு சராசரியாக 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெரும்பாலும் காலை நேரங்களிலேயே ஆடுகளை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். அடையாளத்திற்காக மையினால் ஆன விலாசங்களை குர்பானி ஆட்டின் மீது பதிந்துவிட்டு மந்தைகளோடு ஆடுகளை மேய விட்டு செல்கின்றனர். பெருநாள் பண்டிகையின் முந்திய நாளில் ஆடுகளை திரும்ப மீட்டு செல்வார்கள்.
இது ஒருபுறமிருக்க வழக்கம் போல் இந்த வருடமும் அதிரையில் செயல்படும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கூட்டு குர்பானி திட்டத்தின் மூலம் ஆடு, மாடு, ஒட்டங்களின் பங்குகள் பொதுமக்களிடம் பெரும் பணி தீவிரமாகியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் குர்பானி தோள்களை வசூல் செய்யும் முயற்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் கிடைக்ககூடிய வருவாய் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
This comment has been removed by the author.
ReplyDeleteதவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி
Deleteதேதி மாற்றப்பட்டது.
தயவு செய்து தேதியை சரிபார்க்கவும்
ReplyDeleteதவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி
Deleteதேதி மாற்றப்பட்டது.
தயவு செய்து தேதியை சரிபார்க்கவும்
ReplyDelete