.

Pages

Friday, September 18, 2015

மெக்கா ஓட்டலில் தீ விபத்து:1028 ஆசிய ஹஜ் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம் !

இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ யாத்திரை கடந்த 15–ந்தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மெக்கா நகருக்கு சென்று அங்குள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மெக்கா அருகேயுள்ள கஷிஸியா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலின் 8–வது மாடியில் பயணிகள் தங்யிருந்த அறைக்கு வெளியே தீப்பிடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஓட்டலில் ஆசிய நாடுகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் தங்கியுள்ளனர். எனவே, அங்கிருந்து 1000–க்கும் மேற்பட்ட ஆசிய ஹஜ் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 2 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.