.

Pages

Monday, October 13, 2014

அஜ்மானில் சிறுவர் இலக்கிய நூல் அறிமுக நிகழ்ச்சி !

அஜ்மான் : அஜ்மான் தமிழ் வாசகர் வட்டத்தின் சார்பில் சிறுவர் இலக்கிய நூல் அறிமுக நிகழ்ச்சி 10.10.2014 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நூல் அறிமுக நிகழ்விற்கு பாலு தலைமை வகித்தார்.   சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். பாலு ‘எங்கள் உலகம்’ எனும் சிறுவர் இலக்கிய அறிமுகப்படுத்திட சலீம் பெற்றுக் கொண்டார்.

பாலு தனது உரையில் சிறுவர் இலக்கியங்கள் மறைந்து வரும் வேளையில் இலங்கைக் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் ‘எங்கள் உலகம்’ எனும் சிறுவர் இலக்கிய நூல் அறிமுகம் செய்யப்படுவது மகிழ்வளிக்கிறது. இதனை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திட கேட்டுக் கொண்டார்.

இம்தாதுல்லா தனது வாழ்த்துரையில் சிறுவர் இலக்கியங்கள் குறைந்து வரும் சூழலில் கவிஞர் ஜின்னாஹ்வின் இந்த நூல் இலக்கிய உலகிற்கு ஆறுதலளிக்கும் வண்ணம் மைந்துள்ளது. எழுத்தாளர்கள் அதிக அளவில் சிறுவர் இலக்கியங்களைப் படைத்து தொலைக்காட்சிகளில் தொலைந்து வரும் சிறுவர் இதயங்களை இலக்கியங்கள் பால் ஈடுபாடு கொள்ள வைக்கப்பட வேண்டும் என்றார்.

நிகழ்வில் சாலி, காஜா, பஷீர், நைனா,  மஸ்தான்,  இம்தினான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.