இன்று காலை தூய்மை இந்தியா திட்டத்தின் பிரச்சாரம் நாடெங்கிலும் தொடங்கியது. இந்த பணிக்காக துடைப்பத்தை கொண்டு ஆங்காங்கே தூய்மை படுத்தப்பட்டது. இந்நிலையில் அதிரையில் கடந்த சில நாட்களாகவே குமியும் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே சிதறிக்காணப்படுகிறது. இதனால் சாலைகள் அருவருப்பாக காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த குப்பைகளை பார்க்கும் போது 'கிளீன் இந்தியா' திட்டத்தை பிரதமர் திரு. மோடி, அதிரையிலிருந்து துவங்கியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.
1. குப்பைகளை சாலையோரத்தில் ஏனோ தானென்று கொட்டிவிட்டு செல்லும் பொதுமக்களின் குற்றமா ?
2. அதிரையின் எந்தவொரு இடத்திலும் குப்பை தொட்டிகளை வைக்காத பேரூராட்சி நிர்வாகத்தின் குற்றமா ?
3. சாலையோரத்தில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை கிளறிச்செல்லும் தெருக்களில் கேட்பாரற்று மேயும் மாடுகளின் குற்றமா ?
4. தன் வீட்டருகில் குப்பைகளை கொட்டிவிட்டு போவதை கண்டிக்காத வூட்டு ஓனர்களின் குற்றமா ?
5. குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனம் பழுதடைந்து பேரூராட்சி பின்புறமாக முடங்கி கிடக்கும் டிராக்டரின் குற்றமா ?
6. சரியான நேரத்தில் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் காலதாமதம் செய்யும் துப்புரவு பணியாளர்களின் குற்றமா ?
7. தங்கள் பகுதியை கண்டுகொள்ளாத வார்டு கவுன்சிலர்களின் குற்றமா ?
8. இதற்கெல்லாம் மாற்று வழியை யோசிக்காத பேரூராட்சி நிர்வாகத்தின் குற்றமா ?
யாரைக் குற்றஞ்சொல்வது !?

இன்று பகல் அதிரையில் எடுக்கப்பட்ட படங்கள் சில :

.jpg)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.