பெருநாள் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிரையில் உள்ள இறைச்சி கடைகளின் வியாபாரிகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முழு ஆடுகளாகவும், எடை வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆடுகளும் சராசரியாக 20 முதல் 30 கிலோ வரை எடையளவு கொண்டுள்ளது. முழு ஆடு சராசரியாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையும், முழு ஆட்டை எடை வைத்து கிலோ ரூ 220/- க்கு விற்பனை செய்யபடுகிறது.
பெரும்பாலும் காலை நேரங்களிலேயே ஆடுகளை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். வாங்கிய ஆட்டின் மீது தங்களின் விலாசம் பதித்துவிட்டு ஆட்டு மந்தைகளோடு மேய விட்டுவிட்டு செல்கின்றனர். குர்பானி கொடுப்பதற்காக பெருநாள் பண்டிகையின் முந்திய நாளில் ஆடுகளை திரும்ப மீட்டு செல்வார்கள். இது ஒருபுறமிருக்க வழக்கம் போல் இந்த வருடமும் அதிரையில் செயல்படும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கூட்டு குர்பானி திட்டத்தின் மூலம் ஆடு, மாடு, ஒட்டங்களின் பங்குகள் பொதுமக்களிடம் பெறபட்டு வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் கிடைக்ககூடிய வருவாய் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.






//இதில் கிடைக்ககூடிய வருவாய் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.//
ReplyDeleteஅல்லாஹ் அந்த சகோதரர்களுக்கு அருள் புரிவானாக