.

Pages

Wednesday, October 1, 2014

குர்பானிக்காக அதிரையில் குவிந்த ஆடுகள் !

இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை எதிர்வரும் [ 06-10-2014 ] அன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு குர்பானி வழங்குவார்கள். இதற்காக ஆடு, மாடு, ஒட்டகங்கள் அதிரைக்கு வர துவங்கியுள்ளது. குறிப்பாக அதிரை சுற்று வட்டார கிராமப்பகுதியின் விவசாயிகளிடமிருந்து வாங்கி வரப்பட்ட செம்மறி இன ஆடுகள் அதிகமாக வர துவங்கியுள்ளது.

பெருநாள் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிரையில் உள்ள இறைச்சி கடைகளின் வியாபாரிகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முழு ஆடுகளாகவும், எடை வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆடுகளும் சராசரியாக 20 முதல் 30 கிலோ வரை எடையளவு கொண்டுள்ளது. முழு ஆடு சராசரியாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையும், முழு ஆட்டை எடை வைத்து கிலோ ரூ 220/- க்கு விற்பனை செய்யபடுகிறது.

பெரும்பாலும் காலை நேரங்களிலேயே ஆடுகளை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். வாங்கிய ஆட்டின் மீது தங்களின் விலாசம் பதித்துவிட்டு ஆட்டு மந்தைகளோடு மேய விட்டுவிட்டு செல்கின்றனர். குர்பானி கொடுப்பதற்காக பெருநாள் பண்டிகையின் முந்திய நாளில் ஆடுகளை திரும்ப மீட்டு செல்வார்கள். இது ஒருபுறமிருக்க வழக்கம் போல் இந்த வருடமும் அதிரையில் செயல்படும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கூட்டு குர்பானி திட்டத்தின் மூலம் ஆடு, மாடு, ஒட்டங்களின் பங்குகள் பொதுமக்களிடம் பெறபட்டு வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் கிடைக்ககூடிய வருவாய் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. //இதில் கிடைக்ககூடிய வருவாய் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.//

    அல்லாஹ் அந்த சகோதரர்களுக்கு அருள் புரிவானாக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.