.

Pages

Tuesday, October 14, 2014

கேரளா மாநில அமைச்சர் அதிரை ஜாவியா மஜ்லீஸில் பங்கேற்பு !

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கடந்த 25-09-2014 அன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மஜ்லீஸில் கேரளா மாநிலத்தின் பொதுப்பணிதுறை அமைச்சர் V.K. இப்ராஹீம் குஞ்சு வருகை தந்து கலந்துகொண்டார். இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.

முன்னதாக இன்றைய மஜ்லீஸில் கலந்துகொண்ட மாநில அமைச்சரை ஜாவியா நிர்வாக கமிட்டியினர் மற்றும் அதிரை நகர முஸ்லீம் லீக் கட்சியினர் அன்புடன் வரவேற்பு அளித்தனர்.

வருகை குறித்து கேரளா மாநில அமைச்சர் V.K. இப்ராஹீம் குஞ்சு நம்மிடம் கூறும் போது...
'பல ஆண்டுகளாக அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த புனித மிக்க மஜ்லிசில் தொலைதூரத்திலிருந்து வருகை தந்து கலந்து கொண்டதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த மஜ்லீஸால் இந்த ஊர் மற்றும் இந்த ஊரைச்சுற்றியுள்ள பகுதிகள் மிகுந்த சிறப்பைபெறுகிறது. வருடம் தோறும் நடைபெற இருக்கிற இந்த மஜ்லீஸில் நான் தொடர்ந்து கலந்து கொள்ள இறைவன் நல்அருள் புரிய வேண்டும். இந்த மஜ்லிசை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும் நிர்வாகத்தினருக்கும், சிறந்த சொற்பொழிவுகளை வழங்கிவரும் ஆலிம் பெருமக்களுக்கும், கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த ஊர் பொதுமக்களுக்கும் இறைவன் ரஹ்மத்தையும், பரக்கத்தையும் வழங்க வேண்டும் என துவா செய்கிறேன்' என்றார்.








3 comments:

  1. முத்துபேட்டை தர்காவிலும் பாத்திஹா ஓதினார் என்பதை முத்துப் பேட்டை வலைதளங்கள் போடவில்லையா?

    ReplyDelete
  2. துஆக்களில் மிகசிறந்ததும் அது அல்லாஹ்விடம் கபூல் ஆகும் பட்சத்தில் மனிதர்கள் துனியாவில் நிம்மதி அடைவதும் ஒன்றே ஒன்று ...
    அதுதான் யா அல்லாஹ் துனியாவில் என்னை நல்ல மனிதர்களோடு சேர்த்துவை என்ற துஆ இது எனது தகப்பனார் அவர்கள் என்னிடம் அதிகம் சொல்லும் அறிவுரை .
    நல்லோர்கள் கூடுமிடம் புனிதம் காரணம் அங்கே மலக்குகள் இறக்கிவிடபடுகின்றனர் .....இமாம் புகாரி அவர்களின் ஹதீஸ்கள் இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாசிக்கபடிகின்றன ....இருப்பினும் இதைவிட மேலாக நாம் கருதும் திக்ருகளும் தொழுகைகளும் இங்கு தினம் தோறும் நடைபெறுகின்றன....

    நமதூரில் காலரா என்ற கொடிய நோயும் அதில் இறந்த பலநூறு அதிரைமக்களும் அதை அறிந்தோர் இன்றைய அதிரையில் மிக மிக குறைவு என்றே சொல்லலாம் ...இதை எனது தகப்பனார் மர்கூம் ஹாபிஸ் .முகமது அப்துல் காதற் அவர்கள் எனக்கு நிறையவே சொல்லி இருக்கிறார்கள் . இன்றைய அதிரை இயற்கை சீற்றங்கள் மற்றும் கொடிய நோயின் பிடியில் இருந்து தப்பித்து வருவதற்கு நமதூரின் இந்த புகாரி சரீபும் ஒரு காரணம் என்றால் அதற்கு மிகை இல்லை என்றே கூறலாம் .

    ReplyDelete
  3. பாத்திஹாவில் உள்ள விளக்கங்களைப் புரிந்தால் அல்லாஹ்விடம் இரண்டறக் கலந்த இறைநேசர்கள் இடங்களில் ஓத வேண்டும் என்பது புரியாமல் போகாது.

    புகாரி சரீபில் ஓதப்படும் ஹதீஸ்கள் பெருமானாருடைய காலத்தில், வாழ்வில் நடந்தவைகள். அதனை அறிந்தால், அதன்படி பின்பற்றினால் நம் தொழுகையும், திக்ருகளும் சிறப்புக்குரியதாகும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லைத் தானே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.