.

Pages

Tuesday, October 14, 2014

கேரளா மாநில அமைச்சர் எஸ்.எஸ்.பி நசுருதீன் இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரிப்பு !

கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் அதிரையில் இன்று காலை நடைபெற்ற ஜாவியா மஜ்லீஸில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலத்தின் பொதுப்பணிதுறை அமைச்சர் V.K. இப்ராஹீம் குஞ்சு வருகை தந்தார். மஜ்லீசை முடித்துவுடன் எஸ்.எஸ்.பி நசுருதீன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். விரைவில் பூரண குணமடைய தாம் இறைவனிடம் துவா செய்வதாக அவரிடம் கூறினார்.

சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், முஸ்லீம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப், நகர தலைவர் K.K. ஹாஜா,  A. சேக் அப்துல்லா, அபூபக்கர், மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது மற்றும் அதிரை நகர முஸ்லீம் லீக் கட்சியினர் உடன் இருந்தனர்.


1 comment:

  1. அதிராம்பட்டிணத்தின் சிறப்புக்குரியவர்கள் பட்டியலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனின் தமிழ் மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி சேக் நஸ்ருதீன் அவர்களும் உண்டு. அவர்கள் பரிபூரணச் சுகத்துடன் பல்லாண்டு வாழ இறைவனிடம் துவாச் செய்வோர்கள் பட்டியலில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.