
பேராவூரணி முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவரும் , வர்த்தக சங்க முன்னாள் செயலாளரும், வர்த்தக கழக கட்டுப்பாட்டு கமிட்டி முன்னாள் உறுப்பினருமான சொ.சுப்பிரமணியன் செவ்வாய் அன்று காலமானார்.
அன்னாருக்கு வயது 73. லெட்சுமி என்ற மனைவியும், அங்கவை, சிவகாமி என்ற இரண்டு மகள்களும், நற்கிள்ளி என்ற மகனும் உள்ளனர்.
இவர் பேரூராட்சி தலைவராக இருந்த போது தான் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேராவூரணி பகுதியில் நிலவிய குடிதண்ணீர் தட்டுப்பாடு போக்க ஆழ்குழாய் கிணறு அமைத்து, வீட்டுக்கு வீடு குடிதண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்க பெருமுயற்சி எடுத்து வெற்றி கண்டவர். இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் செழிப்படைய காரணமான குளிர்பானத்தொழிலின் பிதாமகனாக திகழ்ந்தார்.
திமுகவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதன்கிழமை காலை பத்து மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. இறுதி நிகழ்ச்சிகள் மதியம் நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி மற்றும் படம்:
எஸ்.ஜகுபர்அலி, பேராவூரணி.
இன்றைக்கு ஊருக்கு ஊர் காணப்படும் கூல்டிரிங்ஸ் பாதாம்கீர், ஆரஞ்சு , லெமன் , ப்ரூட் மிக்சர் போன்ற பானங்கள் விற்பனையில் பலர் கொடிகட்டிப் பறக்கின்றனர் .பலர் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்துள்ளனர் .அதற்கெல்லாம் காரணகர்த்தாவாக சொ.சு. திகழ்ந்தார் .
ReplyDelete