.

Pages

Wednesday, October 1, 2014

பேராவூரணி முன்னாள் பேரூராட்சி தலைவர் மரணம் !


பேராவூரணி முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவரும் , வர்த்தக சங்க முன்னாள் செயலாளரும், வர்த்தக கழக கட்டுப்பாட்டு கமிட்டி முன்னாள் உறுப்பினருமான சொ.சுப்பிரமணியன் செவ்வாய் அன்று காலமானார்.
         
அன்னாருக்கு வயது 73. லெட்சுமி என்ற மனைவியும், அங்கவை, சிவகாமி என்ற இரண்டு மகள்களும், நற்கிள்ளி என்ற மகனும் உள்ளனர்.
         
இவர் பேரூராட்சி தலைவராக இருந்த போது தான் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேராவூரணி பகுதியில் நிலவிய குடிதண்ணீர் தட்டுப்பாடு போக்க ஆழ்குழாய் கிணறு அமைத்து, வீட்டுக்கு வீடு குடிதண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்க பெருமுயற்சி எடுத்து வெற்றி கண்டவர். இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் செழிப்படைய காரணமான குளிர்பானத்தொழிலின் பிதாமகனாக திகழ்ந்தார்.
         
திமுகவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதன்கிழமை காலை பத்து மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. இறுதி நிகழ்ச்சிகள் மதியம் நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

செய்தி மற்றும் படம்:
எஸ்.ஜகுபர்அலி, பேராவூரணி.

1 comment:

  1. இன்றைக்கு ஊருக்கு ஊர் காணப்படும் கூல்டிரிங்ஸ் பாதாம்கீர், ஆரஞ்சு , லெமன் , ப்ரூட் மிக்சர் போன்ற பானங்கள் விற்பனையில் பலர் கொடிகட்டிப் பறக்கின்றனர் .பலர் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்துள்ளனர் .அதற்கெல்லாம் காரணகர்த்தாவாக சொ.சு. திகழ்ந்தார் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.