எனவே, அவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாரிப் ராணுவ தளத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அங்குள்ள ஆயுத கிடங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த குண்டுகள், ராக்கெட் குண்டுகள், வெடி பொருட்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. அதில் அங்கு தங்கியிருந்த ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 45 வீரர்கள் உடல் கருகி பலியாகினர்.
ஏமனில் முகாமிட்ட 6 மாதத்தில் நடந்த தாக்குதலில் ஐக்கிய அரபு எமிரேட் ராணுவத்துக்கு இதுவே மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. எனவே, அங்கு 3 நாள் அரசு துக்கம் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (05/09/2015) முதல் 3 நாட்களுக்கு அமீரகத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது. ரேடியோ நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete