இந்த விருதை எதிர்வரும் [ 06-09-2015 ] ஆசிரியர் தினத்தன்று மணப்பாறையில் நடைபெறும் லயன்ஸ் சங்கத்தின் மாபெரும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கிறது. நல்லாசிரியர் விருதிற்கு தேர்வானதை அடுத்து தலைமை ஆசிரியை எம் சுராஜ் அவர்களை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் கடந்த SSLC அரசுப் பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைக்க வைத்தது. பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்தது. மாணவிகளை அதிக மதிப்பெண்கள் பெற கூடுதல் கவனம் செலுத்தியது. பெற்றோர் – ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நிறை – குறைகளை கேட்டறிந்தது. அதிகாலை நேரங்களில் மாணவிகளுக்கு போன் செய்து படிப்பதற்கு நினைவூட்டியது உள்ளிட்ட பணிகளுக்காக தலைமை ஆசிரியை எம். சுராஜ் B.Sc., MA., B.Ed அவர்களுக்கு 'அதிரை நியூஸ்' சார்பில் கடந்த 25-05-2015 அன்று அதிரையில் நடைபெற்ற மாபெரும் கல்வி விருது வழங்கும் விழாவில் 'சிறந்த கல்விச்சேவை' விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றை அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDelete