.

Pages

Wednesday, September 16, 2015

கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு !

சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை
விண்ணப்பிக்க காலக்கெடு 15-10-2015 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு. அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிறித்துவர் - இஸ்லாமியர் - புத்த மதத்தினர் - சீக்கியர் பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு (Prematric) பள்ளிமேற்படிப்பு (Postmatric) – தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (Meric cum Means Based Scholarship) திட்டத்தின்கீழ் 2015-16ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது,

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் புதியது fresh (ம) கல்வி உதவித்தொகை offline விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 25-9-2015க்குள் சமர்ப்பிக்க வேண்டும், 9 ஆம் வகுப்பு முதல் பி,எச்,டி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ-மாணவியர் ஆன்லைன் மு்லம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு 15-10-2015 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது,

சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரியகாலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.