இதில் தரகர்தெரு பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 11 பேர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 2 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மீதமுள்ள 9 பேர்கள் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்பிறகு மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலையில் நிர்வாகக்குழு கூட்டம் கூடியது. இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: எம். நெய்னா முஹம்மது ( ஆஃப்ரின் )
உதவித்தலைவர்- I : எம். எம். முஹம்மது மீராஷாகிப்
உதவித்தலைவர்- II: எஸ்.எம்.ஜி பசூல்கான்
செயலாளர்: எம்.ஒய் அஸ்ரப் அலி
இணை செயலளார்: கே.எம் முஹம்மது அர்ஷாத்
பொருளாளர்: எஸ். ராஜிக் அஹமது
உறுப்பினர்கள்:
1. எஸ். ஹாஜா முகைதீன்,
2. கே.எம் நெய்னா மலை,
3. எம்.எம் அஸ்லம்
தமிழ்நாடு வக்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.




வாழ்த்துக்கள். அன்பும் அமைதியும் நிலவட்டுமாக.
ReplyDeleteமாஷா அல்லாஹ், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ், இந்த புதிய நிவாகிகளினால் நமது தெரு இறைவனின் கிருபையால் அமைதி கண்டு நல்ல பல காரியங்கள் செய்து, எல்லோரிடமும் பாசமாக பழகி, பழய தவறுகளை மறந்து, நம் எல்லோரும் நமது சகோதரர் என்று எண்ணி, நம் தெருவின் நலனுக்காக பாடு படுங்கல். அது போல் நமது தெரு வாசிகளும் இந்த புதிய நிவாகிகளுடன் சேர்ந்து நல்ல காரியங்களை செய்யுங்கள் .
அல்ஹும்து லில்லாஹ்,
This comment has been removed by the author.
ReplyDeleteஅதிரையில் எந்தப் முஹல்லாவில் இம்மாதிரியான தேர்தல் நடந்துள்ளது? குறைந்தது 30 தொழுகை நடத்தும் பள்ளி எவை வக்ப் போர்டுடன் இணைக்கப் பட்டுள்ளது?. பிரச்னை அடிப்படையில் பல பிரிவுகளை கொண்ட தெருவில் கோர்ட்டு வழக்குகள் உள்ளது என்று சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் வக்ப் போர்டு நடந்துக் கொண்டதென்றால் யார் விலைப்போனார்கள் என்று தெரியவில்லை.
ReplyDeleteபொது சொத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களிடம் புதியவர்கள் மீட்டெடுப்பார்களா? அல்லது இருக்கும் சொத்தை காவந்து பண்ணுவார்களா? கண்துடைப்பாக ஒரு தேர்தல் நடத்தி வரும்கால சந்ததினர்களுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சிலர் முயல்வது வருத்தக்குரியது,
3 வருடம் கழித்து புதிய பஞ்சாயத்து எடுத்து வைத்து இருக்கிறார்கள் புதியவர்களின் பதவிக்காலம் இனி எத்தனை வருடமோ? இவர்களின் தேர்வு செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.