நமது
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர்
தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு லயன் சங்க மாவட்டம் 324 A2 சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறை
செளமா பப்ளிக் ஸ்கூலில் ஆசிரியர் தின விழா மற்றும் ‘டாக்டர் அப்துல்
கலாம் நினைவு விருது’ வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் அதிரை நகர லயன்ஸ் சங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நமதூர் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் திருமதி M.சுராஜ் B.Sc., MA., B.Ed அவர்களுக்கு சிறந்த சேவைக்காக ‘டாக்டர் அப்துல் கலாம் நினைவு விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
காதிர்
முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் கடந்த SSLC அரசுப் பொதுத்தேர்வில் மாநில
அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைக்க வைத்தது. பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை
அதிகரித்தது. மாணவிகளை அதிக மதிப்பெண்கள் பெற கூடுதல் கவனம் செலுத்தியது. பெற்றோர்
– ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நிறை – குறைகளை கேட்டறிந்தது. அதிகாலை
நேரங்களில் மாணவிகளுக்கு போன் செய்து படிப்பதற்கு நினைவூட்டியது உள்ளிட்ட சிறந்த
சேவைக்காக தலைமை ஆசிரியை எம். சுராஜ் B.Sc., MA., B.Ed அவர்களுக்கு‘டாக்டர் அப்துல்
கலாம் நினைவு விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவில்
தலைமை ஆசிரியை M.சுராஜ் அவர்களின் கணவர் A.ஜமால் முகைதீன், அதிரை லயன் சங்கத்தின் தலைவர் Lion N.ஆறுமுகசாமி, செயளாலர் Lion. M.முஜிபுர் ரஹ்மான், இணைச் செயளாலர் M. முத்துசாமி மற்றும் லயன் சங்க
உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக இவ்விழாவை Lion. செளமா. ராஜரெத்தினம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார், மாவட்ட ஆளுனர் PMJF.Lion.S. வேதநாயகம் அவர்கள் துவக்கி வைத்தார்,
PMJF Lion K.G.ராமகிருஷ்ணமூர்தி அவர்கள் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை ஆளுனர் II,MJF.Lion.Dr.S.வீரபாண்டியன், PMJF.Lion.S.T. சீனிவாசன், PMJF.Lion.PL.A. சுப்ரமணியன், PMJF.Lion.Er.R. முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக Lion.C.சுப்ரமணியன் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விருது பெற்ற ஆசிரியர் M.சுராஜ் B.Sc., MA., B.Ed அவர்களை அதிரை நகர லயன்ஸ் சங்க முன்னாள் , இந்நாள் நிர்வாகிகள் பலரும் பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.