விழாவிற்கு பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஆசிரியை திருமதி எஸ் ஆஃப்தாப் பேகம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, பெற்றோர் ஆசிரியர் கழக இணைச்செயலாளர் எம்.எஃப் முஹம்மது சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மேலாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் ஆசிரியர் தின உரை நிகழ்த்தினார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் ஆசிரியரின் சிறப்பு குறித்து வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். சிறப்பான ஆசிரியப்பணியை பாராட்டி இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியைகள் சுமித்ரா, கிரேஸ் செல்லாராணி, பாக்கியலட்சுமி ஆகிய 3 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவற்றை பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் வழங்கி கெளரவித்தார்.
முன்னதாக பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி பாக்கியலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழாசிரியர் பி. பார்த்த சாரதி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் என். இத்ரீஸ் அஹமது நன்றி கூறினார். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






Congratulatuon to all TEACHERS
ReplyDeleteCongratulatuon to all TEACHERS
ReplyDelete