பள்ளிக்கு காலாண்டு விடுமுறை என்பதால், பிரபாவதி மதுரையிலிருந்து ஜேஸ்வாவை காரில் அழைத்து வந்தார். காரை பிரபாவதியே ஓட்டிவந்தார். திருச்சிற்றம்பலம் அருகே உள்ள நெடுவாசல் சோதனைச் சாவடி சாலை அருகே பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சென்ற தனியார் பேருந்து கார் மீது மோதியது.
இதில் காரில் சென்ற பிரபாவதியும், ஜேஸ்வாவும் பலத்த காயமடைந்தனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜேஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபாவதி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியனை (33) கைது செய்தனர்.
மிகவும் பரிதாபம், பையனுக்கு சீட் பெல்ட் போட்டு இருக்க வேண்டும் இதை செய்ய தவறவிடுகிறோம், பேருந்து ஓட்டுனரு காரணமாக இருந்தாலும் வண்டியும் அப்படி தான் இருக்கு. தனியார் பஸ் டிரைவர் ஓட்டும் விதமே தனி, ரஜினி ஸ்டைலில் தான் ஒட்டுவான்; நாம் தான் உசாராக இருக்க வேண்டும். மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்.
ReplyDeleteமகனை இழந்துவாடும் பெற்றோருக்கு
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்.து
கொள்கிறேன்!