தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 27–ந்தேதி முதல் அடுத்த மாதம் 3–ந்தேதி வரை தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் புகை வண்டி நிலைய வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இப்பேரணி புகை வண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன்அவர்கள் தெரிவித்ததாவது.
குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படுகின்றது. இந்த முகாம் தமிழகத்தில அனைத்து இடங்களிலும் ஒரு வார காலத்திற்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படவுள்ளது. இம்முகாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு நடத்தப்படவுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உருவாக்கப்பட்ட களப்பரிசோதனை பெட்டியின் மூலம் குடிநீரின் 12 தரக்கட்டுப்பாடுகளை பரிசோதனை செய்யலாம்.
ஓவ்வொரு களப்பரிசோதனை பெட்டி மூலம் 100 நீர் மாதிரிகளின் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் இக்களப் பரிசோதனை பெட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளின் நீர் மாதிரிகளை சோதனை செய்ய கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பாதுகாப்பு வாரத்தின் நான்காவது நாள் முதல் முடியும் நாள் வரை ஊரக மற்றும் நகர்ப்புற அனைத்து குடிநீர் நீராதாரங்களிலும் தரப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இம்முகாமின் குழு தஞ்சை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி மற்றும் 2 நகராட்சிகளில் தலா 250 வீதம் 750 நீர் மாதிரிகளும், 22 பேரூராட்சிகளில் தலா 200 வீதம் 4400 நீர் மாதிரிகளும், 14 ஒன்றியங்களிலுள்ள 589 ஊராட்சிகளில் 18652 நீர் மாதிரிகளும் ஆக மொத்தம் 23802 நீர் மாதிரிகள், நீர் ஆதாரங்களிலும், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் மற்றும் பொது குடிநீர் குழாய்களிலும் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். குடிநீர் தரப்பரிசோதனைகளை இதற்கென பிரத்தியோகமாக பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் நீh இறைப்பான் இயக்குபவர்களைக் கொண்டு நடத்தப்படும்.
இத்தரப்பரிசோதனைகளுக்காக தஞ்சாவ10ர் மாவட்டத்தில் 8642 பள்ளி ஆசிரியர்களுக்கு 1131 நீர் இறைப்பான் இயக்குபவர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டு இவர்கள் மூலம் அனைத்து குடிநீர் ஆதாரங்களுக்கும் தர பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
குடிநீர் தரப்பரிசோதனையின் அனைத்து விவாதங்களும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் இதற்கென உருவாக்கப்பட்ட இணைய தளத்தில் உடனுக்குடன் சேர்க்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர். என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை செய்து காண்பிக்கப்பட்டது.
இப்பேரணியில் மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.சாவித்திரிகோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தலைமைப் பொறியாளர் திரு.டி.பழனியப்பன், மேற்பார்வை பொறியாளர் திரு.ஏ.பி.ராஜசேகர், நிர்வாக பொறியாளர் திரு.வி.ராமலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர் திரு.வி.சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.