.

Pages

Saturday, June 25, 2016

லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பள்ளி மாணவர்கள் கெளரவிப்பு !

அதிராம்பட்டினம், ஜூன் 25
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2016-2017 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி அதிரை சாரா திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் மேஜர் முனைவர் எஸ்.பி. கணபதி சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ சங்க மாவட்ட இரண்டாம் நிலை ஆளுநர் ஹெச். சேக்தாவூது சிறப்புரை ஆற்றி, புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். இதில் தலைவராக எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக், செயலராக வி. முத்துகிருஷ்ணன், பொருளாளராக எம்.எஃப் சாகுல் ஹமீது ஆகியோர் பொறுப்பேற்றனர்.

லயன்ஸ் சங்க மண்டல செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் மண்டல பொருளாளர் கே. ஸ்ரீராம், வட்டார தலைவர் டி. ஆனந்த கிருஷணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் எம்.நெய்னா முஹம்மது, எஸ்.எம் முஹம்மது மொய்தீன், எம். அஹமது, டி.பி.கே ராஜேந்திரன், எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம். சாகுல் ஹமீது, சாரா அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். லயன்ஸ் சங்க புதிய தலைவராக பொறுப்பேற்ற எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக் ஏற்புரை நிகழ்த்தினார்.

லயன்ஸ் சங்கத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு விழாவில் வாழ்த்துரை வழங்கிய மண்டல தலைவர் எஸ்.கே ராமமூர்த்தி பதவி பிரமாணம் செய்தி வைத்தார்.

முன்னதாக லயன்ஸ் சங்க செயலர் பேராசிரியர் அல்ஹாஜ் அவர்கள் கடந்த ஆண்டில் லயன்ஸ் சங்கம் ஆற்றிய சேவை திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு கூறினார்.

நிகழ்ச்சியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளின் அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்த காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம் ஷாபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு சிறப்பு பரிசும், கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஓர் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

மேலும் விழாவில் நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவியாக தையல் இயந்திரம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழா முடிவில் லயன்ஸ் சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழா ஏற்பாட்டினை அதிராம்பட்டினம்  லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பத்திரிக்கையாளர்கள், சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.