.

Pages

Friday, June 10, 2016

முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அதிரையர் அனுப்பிய புகாருக்கு பதில் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பகுதிகளுக்கு மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் நீர் பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து மறுநாள் காலை விநியோகம் செய்யப்படும்.

கடந்த பிப்ரவரி மாதம் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் இந்த பகுதிகளுக்கு சில வாரங்கள் குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து அதிரை பேரூராட்சி சார்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. மேலும் பற்றாக்குறை பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டன.

இதுதொடர்பாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ. சேக் அப்துல்லா முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார்மனு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இளங்கோவன் குடிநீர் விநியோகம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பதில் கடிதம் அனுப்பி உள்ளார். இதில் புதிதாக 15 எச்.பி மின்மோட்டார் கொள்முதல் செய்யப்படும் என்றும், மேலும் குடிநீர் விநியோகத்தை தடையில்லாமல் வழங்கும் வகையில் உபரியாக இருப்பில் வைத்துக்கொள்ளும் வகையில் 35 எச்.பி மின்மோட்டார் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.