தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள துவரங்குறிச்சி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
துவரங்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் பாப்பாகுள கிராமம், சிவன் கோயில் சாலை, த.வடகாடு வாய்க்காலில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியினை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கவும் உத்தரவிட்டார்.
துவரங்குறிச்சி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவுகளை தரம் பிரிப்பதையும், ஊராட்சிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டுமானம் நடைபெறும் கட்டிடங்கள் ஆகிய இடங்களில் இருந்து சேகரமாகும் திடக்கழிவு ஊராட்சி பொது சுகாதாரப் பணியாளர்களை கொண்டு வாகனங்கள் மூலம் தினசரி சேகரிக்கப்படுகிறது. பின்பு அவை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்படுவதையும், மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கவும், சுய உதவிக்குழுக்கள் மூலமாக மரக்கன்று-நாற்றங்கால் அமைக்கவும், மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது உதவிசெயற்பொறியாளர் (ஊ.வ) திருமதி.கலா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிச்சை மொய்தீன், வட்டார பொறியாளர் திரு.பாரதிதாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.