பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இயங்கும் பொதுசேவை மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலங்களில் இயங்கி வரும் அரசு பொது இ-சேவை மையத்தில் நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்தை வீட கூடுதலாக தொகை வசூல் செய்யப்படுவதாக வரபெற்ற புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இம்மையத்தில் பணியாற்றிய கிருஷ்ண குமார், நாகவள்ளி ஆகிய இருவரும் நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்தை வீட கூடுதலாக வசூலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனடிப்படையில் முறைகேடாக தொகை வசூல் செய்து வந்த இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தாசில்தார் அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை களைவதற்காகவும், மக்களுக்கு சிறப்பான முறையில் சேவைகள் அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அரசால் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வருமானச்சான்று, சாதிச்சான்று, இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா மாற்றம் ஆகியவற்றுக்கு மனு கட்டணமாக ரூ.50-ம், சமூக நலத்துறை மூலம் பெறப்படும் உதவி திட்ட சான்றுகளுக்கு கட்டணமாக ரூ.100-ம் பெறப்படுகிறது.
இந்த மையத்தில் பாஸ்போர்ட் புதிதாக பெற மற்றும் புதுப்பிக்கும் சேவை கட்டணமாக ரூ.100-ம் பெறப்படுகிறது. மின்கட்டணம் செலுத்தும் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. மின் கட்டண தொகை ரூ.1,000-த்துக்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.10-ம், ரூ.3 ஆயிரத்துக்குள் இருந்தால் ரூ.20-ம், ரூ.5 ஆயிரத்துக்குள் இருந்தால் ரூ.30-ம், ரூ.10 ஆயிரத்துக்குள் இருந்தால் ரூ.40-ம், ரு.10 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் ரூ.50-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் மின் கட்டண தொகையுடன் வரையறுக்கப்பட்டுள்ள சேவைக்கட்டணத்தை தவிர கூடுதலாக கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. இந்த மையங்களில் ஆதார் அட்டை பெற அதற்குரிய மையங்களில பதிவு செய்து ஒப்புகை சீட்டு இருந்தால் அதை பயன்படுத்தி பிரிண்ட் எடுத்துக்கொள்ள ரூ.10-ம், பிளாஸ்டிக் கார்டு வழங்கிட ரூ.30-ம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் மூலமாக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.10 சேவை கட்டணமாக பெறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.