.

Pages

Tuesday, June 14, 2016

பசுமை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் !

தஞ்சாவூரில் உலக சுற்றுப்புறசுழல் தினத்தை முன்னிட்டு மாசில்லா தஞ்சை இயக்கம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து திலகர் திடலில் பசுமை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

பேரணியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
உலக சுற்றுப்புறசுழல் தினத்தை முன்னிட்டு மாசில்லா தஞ்சாவூர் உருவாக்கும் வண்ணம் பசுமை பயண விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்படுகிறது.  இந்த பேரணியின் நோக்கம் பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் தூய்மை தஞ்சை, பசுமை தஞ்சை, சுகாதாரமான தஞ்சையை உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.  தூய்மையான தஞ்சையை நடைமுறைப்படுத்தி மாசில்லா தஞ்சை, பசுமையான தஞ்சை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவத்தார்.

இப்பேரணி தஞ்சாவூர் திலகர் திடலில் தொடங்கி மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, காந்திஜி சாலை வழியாக மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியத்தில் முடிவடைந்தது.

இப்பேரணியில் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவை சங்கம் (JRC), நாட்டு நலப்பணித் திட்டம் (NSS), தேசிய மாணவர் படை (NCC), சாரணர் இயக்கம் (SCOUTS) மற்றும் Eco-Club மாணவ மாணவியர்கள், ரோட்டரி சங்கங்கள், லையன்ஸ் சங்கங்கள், ஜேசிஸ் அமைப்புகள், அரசு சாரா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.சுதாகர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.நல்.ராமச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் டாக்டர் சாமுவேல் ராஜ்குமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகர்,  ரெட் கிராஸ் அமைப்பின் தலைவர் திரு.ராஜமாணிக்கம், மீனாட்சி மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மணிவாசகம், டாக்டர் ராதிகா மைக்கேல், டாக்டர் சிங்காரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.