.

Pages

Thursday, June 9, 2016

அரசு இ-சேவை மையங்கள் மூலம் வருமானசான்று, சாதிசான்று, இருப்பிட சான்று பெரும் வசதி !

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 2015-2016ம் ஆண்டு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட ஊரக திட்டங்களில் பிரதான திட்டமான E-சேவை மையம் ( Common Service Centre ) 31-10-2015 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் செயல்படுத்திட ஏதுவாக 14 வட்டாரத்திற்கும் கிராம வறுமை ஒழிப்பு சரகம் - ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு - மகளிர் சுயஉதவிக்குழு ஆகியவற்றிலிருந்து தலா இரண்டு நபர்கள் வீதம் 28 நபர்கள் தேர்வு செய்து மாவட்ட அளவில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அனைத்து வட்டாரத்திலும் கணினி மற்றும் இணைதள வசதி ஒதுக்கீடு செய்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது, மேலும். கிராம அளவில் அனைத்து ஊராட்சிகளிலும் இ-சேவை மையம் தொடங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு நாளும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் வருமானசான்று, சாதிசான்று, இருப்பிட சான்று, மூவலூர் இராமாமிர்தம்  அம்மையார் திருமண நிதி உதவித்திட்டம், முதல் பட்டதாரி சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், விதவை மறுமணச்சான்று, கலப்புதிருமண உதவிதிட்டம், ஆதரவற்ற விதவை மகள் திருமண உதவித்திட்டம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம் போன்ற பல சான்றுகள் இ- சேவை மையம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது,  மேலும், தற்போது தமிழ்நாடு பொறியியல் கல்லூரிக்கான விண்ணப்பங்களும் இ-சேவை மையம் மு்லம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது,

மேற்கண்டவாறு அனைத்து வருவாய்துறை சார்ந்த சான்றுகளுக்கு பொதுசேவை மையங்கள் மு்லம் தலா ரூ 50-/ம். சமு்க நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களுக்கு தலா ரூ 100-/ம் நிரந்த சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும், இ-சேவை மையம் மு்லம் மின்கட்டணம் கட்ட கணினி உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சில தினங்களில் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.