இணையதளத்தில் பதிவு செய்தால் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களை வீடு தேடி அனுப்பிவைக்கும் வசதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2016–17 ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள், மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கின்றன. மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016–17ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12–ம் வகுப்புவரையிலான பாடநூல்களை www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள இ–சேவை மையங்களில் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பதிவுசெய்த பாடநூல்கள் 48 மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் அனுப்பிவைக்கப்படும்.
'இ- சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்' என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
நன்றி: விகடன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.