தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் கடந்த [ 30-05-2016 ] அன்று திறப்பு விழா நடந்தது. இதையடுத்து இந்த பள்ளிவாசலில் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரமலான் மாத நோன்பையொட்டி பள்ளியில் தினமும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சுமார் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை இப்பகுதியை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். மேலும் பள்ளியில் இரவில் தராவீஹ் தொழுகையும், அதனை தொடர்ந்து ஹிஸ்பு நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர்.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete