தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இயங்கும் மதுக்கடை இன்று முதல் மூடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 16 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இயங்கும் மதுக்கடை எண்: 8086 இன்று முதல் மூடப்படுகிறது.
அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மொத்தம் 4 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. குறிப்பாக அதிரை ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளால் அதிரை காவல் நிலையத்தில் அதிகமான வழக்குகள் பதிவாகியது.
இந்த நிலையில் தமிழக அரசு பிறபித்த உத்தரவில் இதில் அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இயங்கும் மதுக்கடை எண்: 8086 ஒன்றாகும். இதனால் அதிரை பகுதியில் இயங்கி வந்த மதுக்கடைகளின் மொத்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளன.
அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை மதுக்கடையை மூட உத்தரவு பிறப்பித்த தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலை மற்றும் அதிராம்பட்டினம் - ஏரிபுறக்கரை ஈசிஆர் சாலையில் இயங்கி வரும் மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் இணைப்பு: கடந்த மே 5 ந் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதிரை ஈசிஆர் சாலையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் போது எடுத்த படம்.
அதிராம்பட்டினம் - ஏரிபுறக்கரை ஈசிஆர் சாலையில் இயங்கி வரும் மதுக்கடையை மூட வேண்டியது மிக அவசியமாகும்!!!
ReplyDeleteரொம்ப நாள் பார்த்து நான் வருத்தபட்டஒன்று இன்று மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இதே ரோட்டில் இன்னொரு கடையிருக்கிறது அதையும் மூட வேண்டும். கெட்டது கிடைக்காத தூரத்தில் இருந்தால் அழிவை தடுக்கமுடியும்
ReplyDeleteரொம்ப நாள் பார்த்து நான் வருத்தபட்டஒன்று இன்று மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இதே ரோட்டில் இன்னொரு கடையிருக்கிறது அதையும் மூட வேண்டும். கெட்டது கிடைக்காத தூரத்தில் இருந்தால் அழிவை தடுக்கமுடியும்
ReplyDelete