.

Pages

Monday, June 13, 2016

மக்கள் குறைதீர்க்கும் நாளில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் !

தஞ்சாவூர் மாவட்டம், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
81 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன்வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன்அவர்கள்  தலைமையில் இன்று (13.06.2016) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுய வேலை வாய்ப்பு வங்கி கடன் மானியமாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் 50 பயனாளிகளுக்கு  சுய தொழில் தொடங்க வங்கி கடனும் ரூ.5 இலட்சமும், மாவட்ட அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற பார்வையற்ற மாணவ மாணவியர்களுக்கு ரொக்க பரிசு பாடப்புத்தகம், விடுதிக் கட்டணம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 மாணவ மாணவியர்களுக்கு ரூ.1 இலட்சத்து 32 ஆயிரமும்,  கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு பணி நியமன ஆணையும், மேலும் 21 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

பிள்ளையார்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு – சுற்றுச்சு10ழல் துறை சார்பில் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பில் மாநிலத்தில் சிறந்து விளங்கும் சுய உதவிக்குழுக்கான போட்டியில் இரண்டாம் பரிசுக்கான 3 இலட்சம் ரூபாய் காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

ஆக மொத்தம் 81 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் திரு. ரவிச்சந்திரன், சமூகபாதுகாப்புத் தனி வட்டாட்சியர் திரு.ரவிச்சந்திரன்  மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.