தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் என். சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி மாணவர் விடுதிகள் 26, மாணவிகள் விடுதிகள் 11, கல்லூரி மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி, தொழில் பயிற்சி மைய மாணவர்களுக்கான விடுதிகள் 6, மாணவிகளுக்கான விடுதிகள் 10 என மொத்தம் 53 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 செட் பாலிஸ்ட்டர் காட்டன் சீருடைகள் வழங்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
இந்த விடுதிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்குப் பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளைப் பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும். கல்லூரி விடுதிகளைப் பொருத்தவரை ஜூலை 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் எதுவும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது சான்றிதழ் அளித்தால் போதும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.